இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் 15வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட பெரும்பாலானோர் மத்தியில் எச்.ஐ.வி பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 3700 எச்.ஐ.வி தொற்றாளர்களை கண்டுபிடித்துள்ளதாகவும் இதில் 60வீதமானோர் மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்ற வேளை 40 வீதமானோர் சமூகத்துக்கு மத்தியில், தாம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் என்று தெரியாமலேயே வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டமைக்கான காரணம், சமூகத்தில் பாலியல் கல்வி இல்லாமையாகும் . அத்துடன் இளையோர் மத்தியில் 90வீதமான உடலுறவுகள், பாதுகாப்பற்ற முறையில் இடம்பெறுவதும் எச்.ஐ.சி சமூகத்தில் பரவுவதற்கான காரணம் என்று எச்ஐவி கட்டுப்பாட்டு திட்டப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.