சீனா டெனிஸ் வீராங்கனை பெங் சுவாய் காணாமல்போன விவகாரத்தை தொடர்ந்து சீனாவில் இடம்பெறும் அனைத்து விளையாட்டுத் தொடர்களும் உடனடியாக இரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு மகளிர் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.
உயர்மட்ட அதிகாரியொருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்திய டெனிஸ் வீராங்கனை பெங் சுவாய், கடந்த 03 வாரங்களாக பொதுவெளியில் தோன்றாத நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமது வீராங்கனைகளை போட்டிகளில் பங்கேற்குமாறு எவ்வாறு தம்மால் அழைப்பு விடுக்க முடியும் என சீன மகளிர் டென்னிஸ் கழகத்தின் தலைவர் ஸ்டீவி சிமொன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாக்குடனான காணொளி அழைப்பில் தாம் பாதுகாப்பாகவும் நலத்துடனும் இருப்பதாக பெங் சுவாய் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணொளி பெங்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாயினும் பெங் சுவாய் காணாமல்போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சீனா டெனிஸ் கழகத்தினால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.