ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வடகொரியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவெனவும், 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி புட்டின் வடகொரிய விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டை வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதியை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் விமான நிலையத்தில் வரவேற்றார்.
இரு நாட்டுத் தலைவர்களும் கடந்த செப்டெம்பர் மாதம் ரஷ்யாவில் சந்தித்ததாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையேயான உறவு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
நட்பு நாடுகளின் பயணத்தின் போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், கிம் ஜாங் உன்னும், பாதுகாப்பு விவகாரங்கள் உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று கிரெம்ளின் கூறியுள்ளது.