‘வளவ்வே நோனா’ வழக்குத் தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றதால் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலி கரந்தெனிய பிரதேசத்தில் இன்று (17) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் வெளியேறாமல் தொடர்ந்திருந்தால், அடுத்த தேர்தலுக்கு கட்சியில் யாரும் வாக்கு கேட்க முடியாது என்று மைத்திரிபால சிறிசேன கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு சென்ற ஏனையவர்களில் பொருத்தமானவர் இல்லாத காரணத்தினால் அவருக்கு பின்னர் விஜயதாச ராஜபக்ஷ தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.