ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவும் இரண்டு முகாம்களில் இருந்தாலும், பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதாரத்தை பலப்படுத்திய பெருமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உரித்தாகும் என நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
ரணிலுடன் அப்போது அரசியல் சித்தாந்த பிரச்சினைகள் இருந்ததாகவும், பொருளாதாரத்தை மீட்பதற்காக சர்வதேச உறவுகளை பேணி நாட்டை சிறந்த தலைவராக கட்டியெழுப்ப அவர் முன்னெடுத்த வேலைத்திட்டத்திற்கு தற்போது தனது ஆதரவை வழங்கியுள்ளதாகவும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
நாட்டை புண்ணிய பூமியாக மாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எந்த அரசியல் முகாமில் இருந்தாலும் நாம் ஒரு கண்ணோட்டத்தில் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதான வீதியிலிருந்து மொரகெட்டிய பிரிக்கும் கால்வாய் வரையான சுமார் அரை கிலோமீற்றர் மாற்று வீதியை புனரமைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பவித்ரா வன்னி ஆராச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.