உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது துருப்புக்களை விலக்கிக் கொண்டால் மட்டுமே அது நேட்டோ உறுப்புரிமைக்கான திட்டங்களைக் கைவிடத் தயாராக உள்ளது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி புடின் இதை குறிப்பிட்டார், மேலும் உக்ரைன் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், கிரெம்ளின் ‘தாமதமின்றி பேச்சுவார்த்தைகளை தொடங்க தயாராக உள்ளது’ என்றார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி புட்டினால் உக்ரைனிடம் நிபந்தனைகள் அல்லது கோரிக்கைகளை முன்வைக்க முடியாது என்றும், அவரே தொடங்கிய போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும் திறன் அவருக்கு உள்ளது என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளார்.