ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் சந்தேகமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்திருந்தார்.
தனியார் தொலைகாட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“.. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அநுர குமார திசாநயக்கவும் சந்தித்துள்ளார் என எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இது உண்மையா பிழையா என்று நாம் விசாரித்து வருகிறோம்.
சேனல் ஒன்றுக்கு வந்து அநுர குமார திசாநாயக்க மூன்று மணித்தியாலங்கள், மிகவும் பெறுமதியான நேரத்தினை அரச நிறுவனம் ஒன்று வழங்கியமை கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. மக்கள் இது குறித்து அறிந்திருக்க வேண்டும்.
அநுர குமார ஒரு கதிரையிலும் இன்னுமொரு வெற்றுக் கதிரை வைத்துக் கொண்டு சும்மா சீன் காட்டினார்கள்.. அவ்வாறு செய்ய அரச அலைவரிசை ஒன்று நேரத்தினை ஒதுக்கியமை குறித்து சந்தேகம் நிலவுகிறது.
என்னதான் சொன்னாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் சந்தேகமில்லை. வேறு யாரும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க மாட்டார்கள்..”