follow the truth

follow the truth

November, 28, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் 15 வருடங்களை பூர்த்தி செய்த Muslim Aid Sri Lanka

இலங்கையில் 15 வருடங்களை பூர்த்தி செய்த Muslim Aid Sri Lanka

Published on

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட முஸ்லிம் எய்ட் (Muslim Aid Sri Lanka) நிறுவனம் கடந்த 15 வருடங்களாக இலங்கையில் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதிகள் மற்றும் வருமானம் இழந்த குடும்பங்களுக்கு உதவி செய்யும் பணிகளை இலங்கையில் முன்னெடுத்து வருகிறது.

முஸ்லிம் எய்ட் (Muslim Aid Sri Lanka) 2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர் நாட்டில் புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வு பணிகளை முதன்மையாக கொண்டு மே 2005 இல் நிறுவப்பட்டது. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை வழங்கி வருவதோடு, நுண்கடன், கல்வி, நீர் மற்றும் சுகாதாரம், வீடு உள்ளிட்ட பல நீண்ட கால மேம்பாட்டு உதவிகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுடனும் இணைந்து பணியாற்றும் நாடளாவிய ரீதியில் ஒரு விரிவான அபிவிருத்தித் திட்டத்தை நிறுவுவதை நோக்கமாக கொண்ட முஸ்லிம் எய்ட் இலங்கையில் தனது 15 வருட சேவை ஆண்டை பூர்த்தி செய்துள்ளது.

இலங்கையில் தனது 15 வருட சேவையினை பூர்;த்தி செய்வதை முன்னிட்டு, முஸ்லிம் எய்ட் இன் பிரதம நிறைவேற்று பணிப்பளர் காஷிப் ஷபீர் மற்றும் முஸ்லிம் எய்ட் சர்வதேச நிகழ்ச்சித் தலைவர் அபு அகீம் ஆகியோர் இலங்கை வந்துள்ளதோடு பல நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பிக்கும் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.

இதன் ஒரு அம்சமாக விஞ்ஞான ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதற்காக கிண்ணியாவிற்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து திருகோணமலை குச்சவெளிப் பிரிவில் உள்ள வறிய மற்றும் கீழ்நிலை நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளத்தில் அடித்துச் சென்ற உழவு இயந்திரம் – இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு

காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள்...

நாளை மறுதினம்(29) மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்

நாட்டை அண்மித்து காணப்படும் ஆழமான தாழ்வு மண்டலம் நாளை மறுதினம்(29) நாட்டை விட்டு விலகிச்செல்லும் எனவும் அதன்பின்னர் மழையுடனான...

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

கொழும்பு, கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)...