அரசியலமைப்புக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும், அவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) பதுளையில் தெரிவித்தார்.
‘இப்போது பொஹட்டுவ குறித்து நாட்டு மக்களிடம் பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது உடைந்து போனாலும் நாம் எதையும் இழக்கவில்லை. அன்று இருந்ததை விட இன்று நாம் பலமாக இருக்கிறோம். தேர்தல் இல்லாமல் இருக்க முடியாது. அரசியலமைப்பின் படி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான முட்டாள்தனமான செயலை செய்யும் என நான் நினைக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறானதொரு செயலைச் செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முடிவாகும்.
எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது எதுவும் கூறமாட்டோம். சரியான நேரத்தில் சொல்வோம். மக்கள் இப்போது பொஹட்டுவ வெல்வதற்காக காத்திருக்கிறார்கள். மக்கள் கட்சிகளைத் தவிர வேறு எதையும் தேடவில்லை.