follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1கடற்றொழில் தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

கடற்றொழில் தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

Published on

ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடந்த காலத்தில் நிலவிய வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளித்து அவருடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

“ஒலுவில் துறைமுகத்தை புனரமைத்து மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

அந்தப் பிரதேச மக்களின் நலன்களைப் பேணும் வகையிலும் அங்குள்ள வளங்களைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்கின்ற வகையிலும் துறைமுகத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

குறித்த துறைமுகத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டறிவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். அப்பணிகளை நிறைவு செய்து விரைவாக எமது இலக்கை அடைய வேண்டும்.

இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவதும், சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்துவதும் எமது கடல் வளங்களை அழிக்கிறது. அது மட்டுமன்றி எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது. எனவே இந்த, இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினை தொடர்பிலும் ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தின்போது இந்திய தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.

கடற்றொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையிலும் கடற்றொழில்துறை வளங்களைப் பாதுகாக்கும் வகையிலும் நாம் கடற்றொழில் தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

தற்போது எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள் மாத்திரமன்றி நுகர்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடி வருகின்றோம். அதேநேரம், நன்னீர் மீன்வளர்ப்பு, நீர் முகாமைத்துவம் குறித்தும் விசேட அவதானம் செலுத்தி வருகின்றோம் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...