அரசாங்க வைத்தியசாலைகளுக்கு ஒரு வருடத்துக்கு தேவையான புற்றுநோய்க்குரிய மருந்துகளின் முதலாவது தொகுதி சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் அமெரிக்காவின் டே சான்ஸ் செரிடீஸ் (LDS Latter – day saints charities) தொண்டு நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்த மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.