மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) உள்ளிட்ட குழுவினர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளது.
அவருடன் மேலும் 09 அதிகாரிகள் விமானத்தில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் லிலோங்வேயில் இருந்து நேற்று (10) காலை மலாவி பாதுகாப்பு படை விமானம் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரேடார் அமைப்பிலிருந்து விலகியதாக மலாவி ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
விமானம் Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடரும் என ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் இராணுவத்தினர் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறே அண்மையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகிய நிலையில் அனைவரும் உயிரிழந்தமையும் நினைவுகூரத்தக்கது.