கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டையை கொண்டு வருமாறு குடிவரவுத் திணைக்களம் மக்களைக் கோருகிறது.
பழைய தேசிய அடையாள அட்டைகளை கொண்டுள்ள விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் தமது பணிகளை மேற்கொள்ள வரும் போது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
“தற்போதுள்ள அடையாள அட்டை பத்து வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருந்தால் அப்போதைய புகைப்படத்திற்கும் இப்போதைய புகைப்படத்திற்கும் மாற்றங்கள் நிறையவே உண்டு. அதில் பல சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் நாம் கோருகிறோம். கடவுச்சீட்டினை பெறவுள்ள நபர் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள தேசிய அடையாள அட்டையினை பாவிக்கிறோம். 2025ம் ஆண்டுக்கு பின்னர் கைவிரல் ரேகைகள் தான் முதலிடம் பெரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்..”
டெய்லி சிலோன் உடனான கலந்துரையாடலில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் கூறுகையில், அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் கடவுச்சீட்டை வழங்குவதே தமது திணைக்களத்தின் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்திருந்தார்.