இந்திய தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் என்று கூறப்பட்ட நால்வரும் ஐ.எஸ். சித்தாந்தவாதிகள் என்பதை காட்டுவதற்காக இந்த நாட்டில் காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காணொளிக்காக ஆஜரான நான்கு சந்தேக நபர்களும் சத்தியப்பிரமாணம் (பய்யத்) வழங்குவதற்காக சூழ்ச்சி செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொதுவாக, ஐ.எஸ். பயங்கரவாதிகள் வலது கை ஆள்காட்டி விரலை உயர்த்தி சத்தியம் செய்தாலும், இந்தியாவில் பிடிபட்டவர்களின் வீடியோவில் இடது கையை உயர்த்தி தவறான வீடியோ எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் இது போலியானது என வீடியோ எடுத்த நபரும் தெரிவித்துள்ளது.
இந்த நால்வரின் தலைவன் என கூறப்படும் ஒஸ்மான் ஜெராட் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று இந்திய பிரஜை ஒருவருடன் வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இது தீவிரவாதச் சம்பவம் இல்லை எனத் தெரியவந்துள்ளதாகவும், இது நாட்டின் நற்பெயருக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதலுக்காக இந்தியா செல்வதாக சபதம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வீடியோவை ஒஸ்மான் ஜெராட் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.