follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2நளினின் கார் மோதிய இளைஞன் ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சையில்

நளினின் கார் மோதிய இளைஞன் ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சையில்

Published on

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார பயணித்த சொகுசு கார் மோதியதில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தினை எதிர்கொண்டதாகவும், அப்போது பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

வட்டுப்பிட்டிவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், சுயநினைவின்றி இருக்கும் இளைஞனின் உயிர் இயந்திரங்களினால் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

திஹாரிய, கல்கெடிஹேனே பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷனுக ரவிந்து என்ற இளைஞனே இவ்விபத்தில் சிக்கியுள்ளதுடன், அவர் மோட்டார் சைக்கிள் விற்பனையை வழமையாக செய்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த இளைஞன் தாயாரை இழந்துள்ள நிலையில் அவரது தந்தை தற்போது மன குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல்,...

புத்தாண்டு காலத்தில் பஸ் சேவைகள் குறித்து இதுவரை 187 முறைபாடுகள்

சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

தேர்தல் தொடர்பில் இதுவரை 176 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல்...