follow the truth

follow the truth

April, 7, 2025
Homeவிளையாட்டுபாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

Published on

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Rishabh Pant 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Naseem Shah மற்றும் Haris Rauf ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி 120 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் Mohammad Rizwan அதிகபட்சமாக 31 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Jasprit Bumrah 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘ஹாட்ரிக்’ தோல்வி கண்ட சென்னை சுப்பர் கிங்க்ஸ் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்கம்

ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள்...

25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சிஎஸ்கே

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20...

தொடர் தோல்வியை தவிர்க்குமா சென்னை? டெல்லி அணியுடன் இன்று போட்டி

இன்று நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பிற்பகல் 3 மணிக்கு சென்னை...