follow the truth

follow the truth

July, 4, 2024
HomeTOP2மேலும் 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு பணிப்புரை

மேலும் 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு பணிப்புரை

Published on

பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்து சேவையில் இயக்கப்படும் சிசு செரிய பேருந்து சேவைக்காக 500 புதிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் 811 பேருந்துகள் மற்றும் 726 தனியார் பேருந்துகள் உட்பட ஆயிரத்து ஐந்நூற்று முப்பத்தேழு பேருந்துகள் சிசு செரிய சேவைக்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கம் இதற்கு ஆண்டுதோரும் 2000மில்லியன் ரூபா ஒதுக்குகிறது.

போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பாடசாலைப் பேருந்துகள் தேவைப்படுவதனால் மாணவர்களுக்காக 500 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருமானத்தைப் பயன்படுத்துமாறு அமைச்சர் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

நாளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படுமா?

ஆசிரியர் - முதன்மைச் சங்கங்கள் சார்பில் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்...

யுக்திய நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஆதரவு

இன்று (04) முதல் புதிய திட்டங்களுடன் யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கைக்கு இலங்கை இராணுவத்தினரின் ஆதரவு...

சுங்கத்துறை அதிகாரிகள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) மற்றும் நாளை (05) சுகயீன விடுமுறையை...