ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது சமையல் எரிவாயுவினால் ஏற்பட்டுள்ள அனர்த்தம், அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு, விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தவிசாளரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.