வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்பரவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் இன்று (07) மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அதற்கு கிராம அதிகாரியின் சான்றிதழ் அவசியம் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
“வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்ய, தலா, 10,000 ரூபாய் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக, கிராம அலுவலர் சான்றிதழ் மற்றும் அது தொடர்பான பரிந்துரைகள் அவசியம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக ஜூன் முதலாம் திகதி முதல் 113 பிரதேச செயலகப் பிரிவுகளின் அதாவது 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 239,000 இற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.