உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க அணி புரட்சிகரமான வெற்றியை பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
பதில் இன்னிங்சை விளையாடிய அமெரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்ததால், ஆட்டத்தின் ஸ்கோரும் சமநிலையில் இருந்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 6 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், போட்டியில் வெற்றியாளரைத் தெரிவு செய்வதற்கான சுப்பர் பவுல் நடைபெற்றது.
19 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்த களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, சுப்பர் பவுலில் ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன்படி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் புதிதாக இணைந்த அமெரிக்க அணி பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க டி20 போட்டியில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.