ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, இது தொடர்பான யோசனை நாளை அல்லது திங்கட்கிழமை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதன் கீழ், 0-30 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 30 ரூபாவிலிருந்து 18 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.
90-120 அலகுகளுக்கு இடையில் ஒரு அலகு 50 ரூபாயில் இருந்து 30 ரூபாவாக குறைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.