follow the truth

follow the truth

November, 27, 2024
HomeTOP1நாளை முதல் பாடசாலை மாணவிகளுக்கு நிவாரணம்

நாளை முதல் பாடசாலை மாணவிகளுக்கு நிவாரணம்

Published on

இலங்கையில் பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நாப்கின் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக 2023ஆம் ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களின் ஊடாக பாடசாலைகளில் அத்தியாவசியமான சீரமைப்புப் பணிகளை அரசாங்கம் சிரமங்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மூன்று வருடங்களாக விடுபட்ட கல்வி நிர்வாக சேவை தரம் 3 தகுதி அடிப்படையிலான நியமன நடவடிக்கைகள் அனைத்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளில் நிறுத்தப்பட்ட அனைத்து பாடசாலை விளையாட்டுகளும் வருடாந்தம் மீண்டும் நடாத்தப்பட்டு விடுபட்ட அனைத்து விளையாட்டுகளும் நடாத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், கல்விப் பொதுத் தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் பாடசாலைக்குள் தொழில் பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கையும் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நீர்த்தேக்கப் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களின் விடுமுறைகள் இரத்து

நிலவும் கடும் மழையின் கீழ் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபையின் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும்...

சீரற்ற காலநிலை : தமிழ் பேசும் மக்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம்

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, நாட்டின் 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று (27)...

நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் – காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை- காரைத்தீவு பகுதியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போன மாணவர்களில் ஒருவரின் சடலம்...