follow the truth

follow the truth

April, 11, 2025
HomeTOP1களனி, களு மற்றும் அத்தனகலு ஓயா நீர்மட்டம் குறைகிறது

களனி, களு மற்றும் அத்தனகலு ஓயா நீர்மட்டம் குறைகிறது

Published on

களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த அபாய நிலை படிப்படியாக மறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா தெரிவித்தார்.

இதன் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹா, ஜாஎல, வத்தளை, மினுவாங்கொட, கட்டான ஆகிய பகுதிகளில் இன்று படிப்படியாக நீர்மட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, களனி கங்கைப் படுகையின் தாழ்வான பகுதிகளான கடுவெல, பயகம, கொலன்னாவ, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மண்சரிவு அபாயம் தொடர்வதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டை பாதித்துள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,000ஐ தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...