பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தும் என தெரிவித்துள்ளது.
உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுடன் தனது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அதன் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மன் தெரிவித்தார்.
“மே 2 ஆம் திகதி தொடங்கிய தொடர் வேலை நிறுத்தம் இன்னும் தொடர்கிறது. நேற்று இராஜாங்க அமைச்சர் ராகவனுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு தரப்பில் இருந்து தீர்வுகளை வழங்குவதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டன. ஆனால் இறுதித் தீர்வாக எங்களுக்கு ஏதாவது தேவை என்று நாங்கள் நம்புகிறோம். அந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டவுடன் நாம் வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவோம். அதுவரைக்கும் எமது வேலை நிறுத்தம் தொடரும். இன்றுடன் 34 நாட்களுக்கு மேல் வேலைநிறுத்தம் அமுலில் உள்ளது..”