“பழைய தொலைபேசிகள் இக்காலத்தில் பயனற்றவை. சுற்றிய காலம் முடிந்துவிட்டது. இப்போது அழுத்தும் காலம்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் நேற்று (02) பிற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“.. கோட்டாபய சஜித்திடம் பிரதமர் பதவியை ஏற்கச் சொன்னார். என்ன செய்தார்? ஜனாதிபதி பிரேமதாச இருந்திருந்தால் பயந்து விட்டு விட்டிருப்பாரா? ஜே.ஆர்.ஜெயவர்தன இருந்திருந்தால் விட்டு விட்டிருப்பாரா? அதுதான் ஐக்கிய தேசியக் கட்சி ஜேவிபி ஓடிவிட்டது. தீர்வு இருக்கவில்லை. என்னிடம் தீர்வு இருப்பதாலேயே நான் ஏற்றுக் கொண்டேன். புத்தாண்டு எப்படி இருந்தது? வெசாக் எப்படி இருந்தது?
ஒரு கட்சி கூட வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை. முன்வைக்க முடியவில்லை. நாட்டை மீட்பதற்கான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் வைப்போம். பொருளாதார மாற்றம் சட்டம். சிலர் IMF உடன் மீண்டும் பேசுவதாகச் சொல்கிறார்கள். கடைக்குச் சென்று கடன் கேட்பது போன்றவற்றைச் செய்ய முடியாது. பொருளாதார மாற்ற சட்டத்திற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.. ” என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.