குறுகிய தூர ஓட்டப்பந்தய சாம்பியனான யுபுன் அபேகோன் உபாதைக்குள்ளாகியுள்ளார்.
ஸ்வீடனில் நடைபெற்று வரும் ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக்கின் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய பின்னர் அது இடம்பெற்றது.
இந்த போட்டி நேற்று (02) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றது.
யுபுனுடன் ஜெர்மன், இத்தாலியன், ஸ்வீடன், ஜப்பானிய மற்றும் அமெரிக்க பலம் வாய்ந்த வீரர்கள் அங்கு போட்டியிட்டனர்.
முந்தைய டயமண்ட் லீக் தொடரின் 7வது கட்டத்தில் 100 மீட்டர் இரண்டாவது குழுவின் இறுதிப் போட்டியில் யுபுன் வெற்றி பெற முடிந்தது.
யுபுனின் செயல்திறன் 10.22 வினாடிகள்.
எனினும், அவரது உபாதை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.