சீரற்ற காலநிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
விபத்துக்கள் காரணமாக 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 5 பேரை காணவில்லை.
சீரற்ற காலநிலை காரணமாக 20 மாவட்டங்களின் 177 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
9,764 குடும்பங்களைச் சேர்ந்த 36,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,174 பேர் 32 பாதுகாப்பான மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
4,119 வீடுகள் பகுதியளவிலும், 28 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தின் பலவெல பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அதன் பெறுமதி 377 மில்லிமீற்றரை எட்டியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலப் பொறுப்பதிகாரி மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.