follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1இன்றும் மழையுடன் கூடிய வானிலை

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

Published on

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (02) எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

அதேநேரம் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து 30 மில்லியன் ரூபா உதவி

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD...

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரும் பிட்டிய வளைவுக்கு அருகில் இன்று (22) பிற்பகல் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள்...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை...