follow the truth

follow the truth

November, 27, 2024
HomeTOP1பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Published on

மோசமான காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (02) அதிகாலை 04 மணி முதல் நாளை (03) அதிகாலை 04 மணி வரை இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை நிலை 3 – வெளியேறவும் (சிவப்பு)

  • கொழும்பு மாவட்டம்:
    – பாதுக்கை
  • களுத்துறை மாவட்டம்:
    – மத்துமை
    – இங்கிரிய
    – பாலிந்தநுவர
    – புலத்சிங்கள
  • இரத்தினபுரி மாவட்டம்:
    – குருவிட்ட
    – எலபாத
    – கிரியெல்ல
    – அயகம
    – எஹெலியகொடை
    – கலவானை
    – இரத்தினபுரி

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)

  • கொழும்பு மாவட்டம்:
    – சீதாவாக்கை
  • அம்பாந்தோட்டை மாவட்டம்:
    -வலஸ்முல்ல
  • களுத்துறை மாவட்டம்:
    -வலல்லாவிட்ட
    – ஹொரணை
  • கண்டி மாவட்டம்:
    – உடபலாத
  • கேகாலை மாவட்டம்:
    – தெஹியோவிட்ட
    – தெரணியாகலை
  • மாத்தறை மாவட்டம்:
    – முல்லட்டியன
    – பிட்டபெத்தர
    – கொட்டபொல
  • நுவரெலியா மாவட்டம்:
    – அமம்பகமுவ
    – கொத்மலை
  • இரத்தினபுரி மாவட்டம்:
    – இம்புல்பே

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)

  • காலி மாவட்டம்:
    – தவகம
    – நியகம
    – எல்பிட்டிய
    – நாகொடை
    – நெலுவ
  • அம்பாந்தோட்டை மாவட்டம்:
    – கட்டுவன
  • களுத்துறை மாவட்டம்:
    – தொடங்கொடை
    – அகலவத்தை
  • கண்டி மாவட்டம்:
    -பாஸ்பாகே கோரல
    – கங்க இஹல கோரல
    – உடுநுவர
    – கங்கவட்ட கோரல
    – யட்டிநுவர
  • கேகாலை மாவட்டம்:
    – யட்டியாந்தோட்ட
    – புலத்கொஹுபிட்டிய
    – ருவன்வெல்ல
    – ரம்புக்கன
    – வரக்காபொல
    – கலிகமுவ
    – அரநாயக்க
    – மாவனெல்லை
    – கேகாலை
  • குருநாகல் மாவட்டம்:
    – மாவத்தகம
    – ரிதிகம
  • மாத்தறை மாவட்டம்:
    – பஸ்கொட
    – அக்குரஸ்ஸ
  • நுவரெலியா மாவட்டம்:
    – நுவரெலிய
  • இரத்தினபுரி மாவட்டம்:
    – பலாங்கொடை
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மழையுடனான வானிலை – பல ரயில் சேவைகள் இரத்து

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு...

டிசம்பர் 3 முதல் பாராளுமன்றம் கூடவுள்ளது

எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் கலாநிதி அசோக...

சீரற்ற காலநிலை – நால்வர் உயிரிழப்பு; 6 பேர் காணாமல் போயுள்ளனர்

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி நால்வர் உயிரிழந்ததாகவும் 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த...