தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மின்சூள் கட்சியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதத்தைத் தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.