முகத்தில் அதிகம் வியர்க்கிறது என்றால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம். உடல் அதிக வெப்பமாகும்போது தானாகவே ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி உண்டாகிறது. ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி தான் முகத்தில் அதிக வியர்வை வர காரணம்.
உடலில் அதிக வெப்பம் உண்டாகும்போது அதனை தணிக்க அதிகப்படியான வியர்வை சுரக்கிறது. முகத்தில் அதிகம் வியர்ப்பவர்களுக்கு தலையிலும் வேர்க்கும். காரணம் இந்த ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி முகம் மற்றும் தலையை தான் அதிகம் பாதிக்கிறது. சிலருக்கு மரபணு மூலமாகவும் முகத்தில் அதிகம் வேர்க்கும். சிலருக்கு அதிக உடல் பருமன் காரணமாகவும் வேர்க்கலாம். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் முகத்தில் வேர்க்கலாம்.
அதிகப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். கடினமான உடல் பயிற்சிகளை மேற்கொள்ளுவதாலும் வியர்வை முகத்தில் சுரக்க செய்யும்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் வெப்பமாக இருக்கும்போது உடலை குளிர்ச்சியாக்க தன்னை தானே உடல் வியர்வை சுரக்க செய்யும். அதனால் உணவு முறைகள் மூலம் குளிர்ச்சியானவைகளை உண்ண வேண்டும்.
உடல் மற்றும் முகம் வியர்க்கும்போது குளிக்கலாம். முகத்தை அடிக்கடி குளிர்ச்சியான நீரில் கழுவலாம். இதனால் வியர்வை வடிவதை தடுக்க முடியும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகளை பருகலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்து வியர்வை வராமல் தடுக்கும்.
முகத்தில் எண்ணெய் வடிதல் இருந்தாலும் முகத்தில் அதிகமாக வேர்க்கும். அதனால் முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவுவது நல்லது.