follow the truth

follow the truth

October, 5, 2024
Homeஉள்நாடுதென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை தொடர்கிறது

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை தொடர்கிறது

Published on

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அனுராதபுரம் – பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மட்டக்களப்பு – பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு – அவ்வப்போது மழைபெய்யும்
காலி – அவ்வப்போது மழைபெய்யும்
யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை
கண்டி – அவ்வப்போது மழை பெய்யும்
நுவரெலியா – அவ்வப்போது மழை பெய்யும்
இரத்தினபுரி – அவ்வப்போது மழை பெய்யும்
திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மன்னார் – பிரதானமாக சீரான வானிலை

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக சமித்த பெரேரா

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் ஹரினி சந்திப்பு

முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயார்செப்டெம்பர் 21 நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு...