வங்குரோத்தான நாட்டில் நாம் செல்ல வேண்டிய பயணப் பாதை, தொலைநோக்கு மற்றும் வேலைத்திட்டம் குறித்து விவாதமும் கலந்துரையாடல்களும் இடம்பெற வேண்டும். இதன் மூலம் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை பரிமாறிக்கொள்ள முடியுமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் நல்ல நல்ல யோசனைகள் இருப்பதால், அந்த யோசனைகள் மற்றும் ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு, அதன் மூலம் யோசனைகள் முன்வைக்கப்படுவதும், பொது மக்கள் கருத்தாடல் நிகழுவதும் மிகவும் முக்கியமான விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நமது நாடு நிதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வங்குரோத்தடைந்து விட்ட நிலையில் 100 பில்லியன் அமெ. டொலர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையிலிருந்து எமது நாட்டை விடுபடுவதற்கான வேலைத்திட்டம், தீர்வு மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கால அட்டவணை குறித்து கருத்தாடல் நடத்தப்பட வேண்டும்.
பொருளாதாரத் துறையில் முன்னேற்றம் குறித்து விவாதம் நடத்துவது அபத்தமானது என்று சிலர் கூறுகின்றனர். இரு தரப்பு பொருளாதார குழுக்களுக்குமிடையில் சினேகபூர்வ விவாதத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். அதனையடுத்து, தலைவர்கள் இருவர்களுக்கும் இடையிலான விவாதத்திற்கு நாளை ஒதுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தான் உட்பட தனது குழுவினர் விவாதங்களில் இருந்து ஒழிந்து ஓட மாட்டோம். பொருளாதார தொலைநோக்கோ, வேலைத்திட்டமோ இல்லாதவர்கள் தான் இத்தகைய விவாதங்களில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். பொருளாதார குழுவும், பொருளாதார வேலைத்திட்டமும் இல்லாதவர்களுக்கு, பொருளாதர குழுவையும், பொருளாதார வேலைத்திட்டத்தையும் தயாரிக்க இந்த விவாதம் உதவ முடியும்.
எனவே, பொருளாதார குழுக்களின் விவாதம் மற்றும் தலைவர்களின் விவாதம் என இரண்டு விவாதங்களுக்குமான திகதிகளை ஒரே நேரத்தில் முடிவு செய்யுமாறு இறுதியாக ஒரு முறை கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.