மேற்கத்திய ஏவுகணைகள் ரஷ்யாவைத் தாக்க அனுமதிக்கக் கூடாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பினர்கள் ரஷ்யாவினை தாக்க உக்ரைனுக்கு மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்த பரிந்துரைத்ததாக ஜனாதிபதி புடின் கூறினார்.
நேட்டோ உறுப்பினர்கள் நெருப்புடன் விளையாடுவதாகவும், அவ்வாறு செய்தால், அது உலகளாவிய மோதலை தூண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட கொடிய உக்ரைன்-ரஷ்யா தரைப் போர் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், உக்ரைனில் ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தில் மேற்கு நாடுகள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளன.
ஆனால் உக்ரைன் போரில் மேற்கத்திய தலையீடு பரந்த உலகளாவிய மோதலின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஜனாதிபதி புடின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், ரஷ்யாவைத் தாக்குவதற்கு நேட்டோ உறுப்பினர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் The Economist இற்கு கூறியிருந்தார்.