கடையின் உரிமையாளருக்கு 45,000 ரூபா அபராதம் விதித்த யாழ்ப்பாணம் மேலதிக நீதவான், வழக்கு முடியும் வரை உணவகத்திற்கு சீல் வைக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சோற்றுப் பொட்டலத்தை வாங்கியவர் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று சாப்பிட முற்பட்ட போது சோற்றுப் பொட்டலத்துக்குள் ‘மர அட்டை’ இருப்பதைக் கண்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், இது தொடர்பில் திருநவேலி பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, அவர் அதிகாரிகள் குழுவுடன் வந்து விசாரணைகளின் பின்னர், உணவகத்தின் அசுத்தமான தன்மைக்காக தனியான வழக்கு பதிவு செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த இரண்டு வழக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான், ‘மர அட்டை’ இருந்த சம்பவத்திற்காக மாத்திரம் 45,000 ரூபா அபராதம் விதித்துள்ளார்.
அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அறிவித்த மேலதிக நீதவான், உணவக உரிமையாளரை எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.