follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2கொழும்பில் ஆபத்தான மரங்களை அகற்ற விசேட வேலைத்திட்டம்

கொழும்பில் ஆபத்தான மரங்களை அகற்ற விசேட வேலைத்திட்டம்

Published on

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் இனங்காணப்பட்ட அதிக ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றும் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிக ஆபத்துள்ள மரங்களை அகற்றுவதற்காக இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் மரங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அகற்றப்பட்ட மரங்களுக்கு புதிய மரங்களை நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...