பஸ்களை வழங்கும் போது பஸ் மேன் என பெயர் சூட்டி அழைக்கின்றனர். இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதோருக்கு இவ்வாறு பகிர்ந்து வருவதில் தவறில்லை. இவ்வாறு விமர்சிப்பவர்கள் உலகம் சுற்றி வந்து அவர்களின் மூளை குழம்பிப்போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்விக்கு முன்னுரிமை அளிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியக் கொள்கைகளில் பிரதானமானது. இதற்கு எம்மிடம் நிறைய வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. இவற்றைக் கூறும் போது, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, பல்வேறு விதமாக மக்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி, 220 இலட்சம் மக்களை மீண்டும் 2019 போல் ஏமாற்றும் முயற்சி இடம்பெற்று வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதுபோன்ற ஏமாற்று வேலைகளை செய்யாமல், போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு உதவவும், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவவும் ஒன்று சேருமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார். இதன் மூலம் நாட்டு மக்கள் நன்மையடைவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
76 ஆண்டு கால வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் நாட்டிற்காக சேவை செய்த ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே என்றும், மக்கள் கோரும் முறைமையில் மாற்றத்தைக் கூட போராட்டத்திற்கு முன்னரே ஐக்கிய மக்கள் சக்தியால் ஆரம்பிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2021 டிசம்பர் 30 ஆம் திகதி அன்று மொனராகலை மாவட்டத்தில் உள்ள போதாகம வித்தியாலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் இந்தத் திட்டம், இன்று 200 ஆவது கட்டத்தை எட்டியுள்ளது. எனக்கு மாத்திரமல்லாது, இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு பல வழிகளிலும் உழைத்து வரும், ஒத்துழைப்பு வழங்கிய, வழங்கி வரும் அனைவருக்கும் இதன் பெருமையும் பாராட்டும் சேர வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.