follow the truth

follow the truth

November, 23, 2024
HomeTOP1கொழும்பிற்கு அடுத்தபடியாக வடக்கிற்கு வலுவான சுகாதார சேவை

கொழும்பிற்கு அடுத்தபடியாக வடக்கிற்கு வலுவான சுகாதார சேவை

Published on

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் 3329 மில்லியன் ரூபா செலவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இருதய மற்றும் சிறுநீரக நோய் பிரிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (26) திறந்து வைக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது இந்த திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

வடமாகாண மக்களுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவின் கீழ் கிடைத்துள்ள இந்த சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

பொறுமையுடன் இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்குப் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவையை வலுப்படுத்த நெதர்லாந்து அரசாங்கம் பரந்த பங்களிப்புகளை செய்துள்ளது. தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலையுடன் பருத்தித்தறை வைத்தியசாலையும் வடமாகாண மக்களுக்கான சுகாதார வசதிகளை வழங்கி வருகிறது.

ஏ9 வீதி இலங்கையின் முதுகெலும்பைப் போன்றது. அந்த வீதியின் ஊடாக வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் மூன்று நவீன வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கராபிட்டி வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றிய பின்னர் யாழ்ப்பாண வைத்தியசாலையையும் தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்துள்ளோம்.

மேலும், ஏ9 வீதியின் அடுத்த நிறைவில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை உள்ளது. அத்துடன் வவுனியா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து போதனா வைத்தியசாலையாக மாற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடம் கோரியிருந்தார். அநுராதபுரத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் 65 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. இன்று இந்த மாகாணம் மிகவும் வலுவான மருத்துவமனை கட்டமைப்பை பெற்றுள்ளது. இது கொழும்பிற்கு வெளியே வேறு எந்த மாகாணத்திலும் பார்க்க முடியாத நிலை என்றே கூற வேண்டும்.

வடமாகாண மக்களுக்கான இந்த சுகாதார சேவைகளை எவ்வாறு மேலும் வலுப்படுத்துவது என்பதை நாம் ஆராய வேண்டும். கொழும்பைத் தவிர, அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையான ஏ9 வீதியும் சுகாதாரப் பாதுகாப்பின் முக்கிய மையமாக மாறியுள்ளது. மேலும் இதன் மூலம் மருத்துவ சுற்றுலாவுக்கு பல வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

மேலும், இந்நாட்டு மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான முக்கியமான திட்டமாக இது அமையும். இந்த திட்டத்தை மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தத் திட்டத்தைத் தொடர நெதர்லாந்து அரசாங்கம் எதிர்காலத்தில் எங்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும்

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள்...

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...

சீன அரசாங்கத்தின் 1996 வீட்டுத் திட்டம் ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம்...