நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பில் 59 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி பணிப்பாளர் பொறியியலாளர் மனோஜ் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவற்றில் 19 மரம் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் பதிவாகியுள்ளதாகவும் இவ்வாறு முறிந்து வீழ்ந்த மரங்களை அகற்றுவதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.