அயர்லாந்து மற்றும் நோர்வேயிலிருந்து தமது தூதர்களை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் இன்று (22) அறிவித்துள்ளது.
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் முடிவை எதிர்த்து, இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தங்கள் தூதர்களை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலின் இறையாண்மை மற்றும் அதன் பாதுகாப்பு குலைக்கப்படுவதை அங்கீகரிக்கும் யாரையும் இஸ்ரேல் பொருத்துக்கொள்ளாது என இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தமை குறிப்பிடத்தக்கது.