ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளுக்கு பெரும் தாக்கமாக அமையும் என்பதனால் சஜித் பிரேமதாச பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார் என, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
“ஐக்கிய மக்கள் சக்தியை இன்று கைப்பற்றி வைத்திருப்பது நாட்டை சீரழித்து கோட்டாபய ராஜபக்சவை இல்லாதொழித்த வியத்மக உறுப்பினர்கள், கோட்டாபய ராஜபக்ச பொதுஜன பெரமுன மூலம் தேர்தலில் போட்டியிட்டு 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதன் பின்னர், நாடு நெருக்கடி நிலையயை அடைவதற்கு தவறான ஆலோசனை வழங்கியதும் இவர்களே. ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவிற்கு இன்று இடமில்லை என அமைச்சர் மேலும் குறிபிட்டுள்ளார்.
தற்போது எம்.பி.க்கள் பலர் எங்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். மே தினத்தில் ஏன் இணைத்துகொள்ள வில்லை என சிலர் கேட்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு காலம் உண்டு அதற்குள் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. உரிய நேரத்தில் அவை நடக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் காலங்களில் எங்களுடன் இணைந்து கொள்ள கலந்துரையாடி வருகின்றனர்.
இந்த ஒவ்வெரு குழுக்களும் ஒவ்வொன்றும் வெவ்வேறு வழியில் இணைத்துகொள்ளும் அதனால் தான் சஜித் பிரேமதாசவிடம் இதனை செய்ய வேண்டாம் என கட்சியை கொண்டு செல்ல முயற்சிப்பவர்களும் உள்ளனர். அதற்கு சஜித் பிரேமதாச செவிசாய்க்காவிட்டால் தனித்தனியாக எம்முடன் இணைய தயார். அதற்கான ஒத்திகையாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட்ட நிமல் பிரான்சிஸ்கோ ஐக்கிய மக்கள் சக்தியின் முல்கிரிகல தொகுதி அமைப்பாளர் இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து வெற்றிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
“தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை எதிகொள்ள வேண்டியுள்ளது. அதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. ரணிலை ஜனாதிபதியாக்க ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாங்கள் தயாராகி வருகிறோம். தற்போது சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் உருவாகி வருகின்றன.ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கூறுகிறது.
ரணில் விக்கிரமசிங்க பலமாக வந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் மரண அடியாக அமையும் என்பது ஐக்கிய மக்கள் சக்திக்கு தெரியும்.
அதனால்தான் சஜித் பிரேமதாச கட்சி உறுப்பினரைப் பாதுகாக்கும் முயற்சியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். நாட்டைப் பற்றிய அவர்களின் விருப்பமான பார்வையை நோக்கி நகரும் போது கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைகின்றனர். ரணில் விக்கிரமசிங்க நாட்டை கட்டியெழுப்ப விரும்புகிறார்.
வீடுகளுக்கு தீ வைக்கும் போது,பொறுப்பை ஏற்க முடியாது என்று கூறியதும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக அனை பொறுப்புகளை ஏற்க முடியாது என்று கூறும் போது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி பதவியை ஏற்று நாட்டையே மாற்றினார் .
அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். அதன் பிறகு பலர் வந்து இணையலாம். ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவே தேசிய வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்.
நாட்டுக்காக அரசியல் செய்யும் அனைவரையும் ஒன்றிணைத்து வெற்றியுடன் முன்னேறிச் செல்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் தயார் செய்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார்.