ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள காஸா குழந்தைகள் நிதியத்துக்கு பேருவளை – சீனங்கோட்டை பள்ளி சம்மேள அனுமதியுடன் இலங்கையில் இரத்தினக்கல் வர்த்தகத்திற்கான மிகப்பெரிய சங்கமான CGJTA சுமார் நாற்பது மில்லியன் ஒரு இலட்சத்து தொண்ணூற்று எட்டாயிரத்து தொள்ளாயிரத்து இரண்டு ரூபா (40 198 902) நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
சீனங்கோட்டை பள்ளிவாசல் சங்கத்தின் துணைத் தலைவர் யாகூத் நளீம், இரத்தினம் மற்றும் நகை வர்த்தக சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் மற்றும் இலங்கையின் இரத்தினக்கல் சங்கத்தின் தலைவர் ஹில்மி காசிம் ஆகியோரின் கையொப்பத்தின் கீழ் இந்த காசோலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான இப்தார் கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் அரசாங்கம் ஏற்கனவே அறிவுறுத்திய பின்னணியில் பலதரப்பினரும் இதற்கான நிதி சேகரித்தலில் பங்கேற்றிருந்தனர்.