follow the truth

follow the truth

November, 22, 2024
HomeTOP2நெதன்யாகுவையே கைது செய்வதா? - பைடன்

நெதன்யாகுவையே கைது செய்வதா? – பைடன்

Published on

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கோரியிருக்கிறார். இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்துள்ளது.

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஏழு மாதங்களை கடந்து தீவிரமாக போர் புரிந்து வருகிறது. இந்த போர் ஆரம்பிக்கும் போது இஸ்ரேலுக்கு நிதியுதவி, ஆயுத உதவிகளை அமெரிக்கா செய்து வந்தது. ஒரு கட்டத்தில் காஸா உள்ளிட்ட பலஸ்தீனப் பகுதிகளில் அப்பாவி மக்கள் கடுமையாக கொல்லப்படுவதாக முறைப்பாடு எழுந்தது. இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று திரண்டன.

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக போர்நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அமெரிக்க தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க மறுத்துவிட்டது. அதேநேரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போர் நிறுத்தம் செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். ஆனால் இஸ்ரேல் இதுவரை கண்டு கொள்ளவில்லை.

இதனிடையே பல்லாயிரம் மக்கள் உயிரிழப்பதை கண்டு கொதித்து போன தென்னாப்பிரிக்கா, பலஸ்தீனத்தில் நடப்பது இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக வாதிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கான், “கடந்த வருடம் அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

இதற்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் தீவிர விசாரணை மேற்கொண்டோம். அப்போது ஹமாஸ் அமைப்பு மனிதகுலத்திற்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளோம்.

அதேபோல் காஸா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியபோது மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இஸ்ரேல் இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களையும் நேரில் சென்று விசாரித்து திரட்டி உள்ளோம்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும். இதேபோல் ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, முகமது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி, யாஹ்யா சின்வர் ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

மேலும் இந்த விவகாரத்தில் படை வீரர், தளபதி, அரசியல் தலைவர் என்று யாருமே தண்டனையிலிருந்து தப்ப முடியாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நபர்களைப் பொறுத்து செயல்படுத்த முடியாது. அப்படி நடந்தால் சட்டத்தின் வீழ்ச்சிக்கான சூழ்நிலையை நாமே உருவாக்கி விடுவோம். இஸ்ரேலுக்கு தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு இணங்க வேண்டிய கடமையிலிருந்து இஸ்ரேல் தப்ப முடியாது என்று தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கூறியிருந்தார்.

இதையடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞரான கரீம் கானை, ‘நவீன காலத்தின் பெரும் யூத எதிர்ப்பாளர்களில் ஒருவர் என்றும், கரீம் கான் நாஜி ஜெர்மனியில் யூதர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, படுகொலையை செயல்படுத்திய நீதிபதிகளைப் போன்றவர் எனறும் கடுமையாக விமர்சித்தார் .

இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பலஸ்தீன ஆதரவு அலை அதிகரித்து வருவதால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். போரை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

அதேநேரம் போர் குற்றங்களுக்காக நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கான் (Karim Khan) பிடியாணை கோரியிருப்பதை ஜோ பைடன் கடுமையாக எதிர்த்துள்ளார்.

நேற்று நடந்த யூத அமெரிக்க பாரம்பர்ய நிகழ்வில் ஜோ பைடன் பேசுகையில், “இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிரான கைது வாரண்டுகளுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விண்ணப்பத்தை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையில் எந்தவொரு ஒற்றுமையும் இல்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும்

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள்...

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...

சீன அரசாங்கத்தின் 1996 வீட்டுத் திட்டம் ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம்...