follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1இன்று தேசிய துக்க தினம்

இன்று தேசிய துக்க தினம்

Published on

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

ஈரானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர் உட்பட 09 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் ஜனாதிபதியின் மறைவை முன்னிட்டு 05 நாட்கள் துக்கம் அனுசரிக்க உயர் தலைவர் அயதுல்லா அல் கமேனி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, பல நாடுகளில் துக்க தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்களுக்கு அனுமதி

ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட பணிகளை தேர்தல் முடிவடைந்தவுடன் அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்; பொதுமக்களை...

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம்

எதிர்வரும் 27ஆம் திகதியை விசேட தினமாக அறிவித்து உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என பிரதி...

அலரி மாளிகைக்கு அண்மித்த வீதி மீண்டும் திறப்பு

அலரிமாளிகை வளாகத்திற்கு அருகில் உள்ள வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) பொதுமக்களின்...