ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள் பலர் கணிக்க தொடங்கி உள்ளனர்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் அவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 12 மணி நேரமாக நடந்த மீட்பு பணியின் முடிவில் அவர் மரணம் அடைந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மரணத்தால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஈரான் நாட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அரசியலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் காரணமாக மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஈரான் இஸ்ரேல் இடையே மோதல் உள்ளது. இப்போது ஈரான் ஜனாதிபதி மரணத்திற்கு இஸ்ரேல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
அரபு நாடுகளில் இருந்த பல்வேறு ஆட்சிகள், மன்னர் ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டதை அரபு வசந்தம் என்று மேற்கு உலகம் அழைக்கும். மேற்கு உலகத்தின் அரசியலுக்கு இது ஆதரவாக இருந்ததால் அதை உலக நாடுகள் அரபு வசந்தம் என்று அழைக்கும். அந்த அரபு வசந்தம் ஒரு வகையில் மத்திய கிழக்கில் பல்வேறு போருக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில்தான் ரியல் அரபு வசந்தம் என்று சொல்லும் விதமாக இஸ்ரேல் – பலஸ்தீனம் போர் காரணமாக இஸ்லாமிய நாடுகள் ஒரு புள்ளியில் இணைய தொடங்கி உள்ளன. முக்கியமாக கடந்த சில மாதங்களுக்கு இஸ்ரேல் நடத்திய மருத்துவமனை தாக்குதல் அந்த நாட்டிற்கே எதிராக திரும்பும் என்ற விவாதம் எழுந்துள்ளது.
இந்த போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. விமான ரெய்டில் அவர்கள் ராக்கெட்டை ஏவினர். இதில்தான் மருத்துவமனை தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் மொத்தம் 800 பேர் வரை பலியாகினர்.
இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகள் ஒன்று சேர தொடங்கி உள்ளன. சன்னி – ஷியா மோதல் காரணமாக பிரிந்து இருந்த சவுதி – ஈரான் கூட இஸ்ரேலை இந்த விவகாரத்தில் ஒன்றாக கண்டிக்க தொடங்கி உள்ளன. இஸ்ரேல் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது. அதன்படியே தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் மிக தவறானது.. மனித தன்மையற்றது.. இஸ்ரேலை உலக நாடுகள் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும். அவர்கள் செய்தது மிகப்பெரிய கொடுமை என்று சவுதி தெரிவித்துள்ளது . பரம வைரிகளான ஈரான் – சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக சமீபத்தில்தான் அறிவித்தது. சீனா மேற்கொண்ட பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் விவகாரத்தில் இந்த நாடுகள் ஒன்றாக சேர்ந்து உள்ளன. பல இஸ்லாமிய நாடுகளை இது ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது. சவுதி – இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட இருந்தது. இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது.
சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மோதல் காரணமாக பலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படியே இஸ்ரேலை ஆதரிக்காமல் பலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சவுதி அரேபியா அறிவித்து உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த 2 மாதங்களுக்கு முன் இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதில் என ஈரான் தெரிவித்து உள்ளது. இருந்தாலும் பலஸ்தீன போர் தொடங்கி பல விஷயங்கள் இந்த மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில்தான் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆகி அவர் பலியாகி உள்ளார். இதில் இஸ்ரேல் நாட்டிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள் பலர் கணிக்க தொடங்கி உள்ளனர்.
உலகப்போர் மூளும் அபாயம்: ஏற்கனவே கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – பாலஸ்தீன போர் போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.
ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு போர்களும் (இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்) நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும் – இந்தப் போர்கள் புதிய உலக ஆர்டரை உருவாக்கும் போராக மாற போகிறது. அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு போர்களும் போரில் ஈடுபட்டு உள்ள நாடுகளின் நட்பு நாடுகளுக்கும் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருவதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.
இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது.
சிரியா தாக்குதல்: சிரியாவின் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை. ஏற்கவும் இல்லை. ஏகப்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேல் மாறி மாறி சிரியா மீது ஏவியதாக கூறப்படுகிறது. சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். இவர்கள் ஈரான் ஆதரவு போராளிகள். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இது போக தெற்கு லெபனான் மீது ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் போர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் போராக மாறுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி சிரியா, லெபனான் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருவதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.
என்ன பிளான்?: ஏற்கனவே சிரியா போரில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.. ஈரான் போருக்கு உள்ளே வந்துள்ள நிலையில்,,. வேறு வழியின்றி கட்டாயத்தின் பெயரில் அமெரிக்காவும் போருக்குள் வரும். இப்படி அமெரிக்காவை போருக்குள் வந்தால் அது கண்டிப்பாக மூன்றாம் உலகப்போருக்கு வழிக்கும் வாய்ப்புகள் உள்ளன.