ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
இந்நிலையில் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஈரான் நாட்டின் புதிய காபந்து ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி முகமது முக்பர் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
ஈரான் அரசியலமைப்பின் 131 வது அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும். இதையடுத்து புதிய ஜனாதிபதியாக முகமது முக்பர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி ஈரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் Ali Bahadori Jahromi, மற்றும் அரசாங்கத்தின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவராக Bagheri Kaniயை நியமித்துள்ளார்.