ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டினல் ஜனாதிபதி ரணில், எலொன் மஸ்கை சந்தித்து கலந்துரைடியாடியிருந்தார்.
எவ்வாறெனினும் மஸ்க் இலங்கை விஜயம் தொடர்பான திகதி தொடர்பான விடயங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.
எலான் மஸ்க், தனது ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் இணையச் சேவை செயல்பாட்டை இந்தோனேசியாவில் அண்மையில் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.