ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பிற மூத்த ஈரானிய அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசுக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஜனாதிபதி தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.
Sri Lanka is deeply shocked and saddened by the tragic death of President Ebrahim Raisi, Foreign Minister Amir Abdollahian and other senior Irani officials. I express my deepest sympathies and sincere condolences to the bereaved families, the government and the people of Iran.…
— Ranil Wickremesinghe (@RW_UNP) May 20, 2024
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.