ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர், மறைந்த ஈரானிய ஜனாதிபதி “இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு” பங்களித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
“அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது X தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Deeply saddened and shocked by the tragic demise of Dr. Seyed Ebrahim Raisi, President of the Islamic Republic of Iran. His contribution to strengthening India-Iran bilateral relationship will always be remembered. My heartfelt condolences to his family and the people of Iran.…
— Narendra Modi (@narendramodi) May 20, 2024