விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறியதை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசி மற்றும் அவருடன் வந்த அதிகாரிகள் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனைகள் பலப்படுத்தப்பட்டன.
ஹெலிகாப்டரில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் விபத்தில் பலியாகி இருக்கலாம் என்றும் உயிர்ப்பிழைக்க வாய்ப்புக்கள் இல்ல என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்டஒரு அணையைத் திறப்பதற்காக அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு ரைசி சென்று இருந்தார். அங்கிருந்து திரும்பி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. .
ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையே, தெளிவற்ற காலநிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அல்லது அவசரமாக தரையிறங்கிய நிலையில் ஆரம்பத்தில், உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிடி, மோசமான காலநிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஏற்பட்டதாகவும் அதனால் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஹெலிகாப்டர் விழுந்த இடம் மலை, காடுகள் நிறைந்த நிலப்பரப்பு மற்றும் கடும் மூடுபனி கொண்ட இடம் ஆகும். இந்த மோசமான காலநிலை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கிருந்து உடலை எடுத்து வரும் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. உடலை மீட்கும் மீட்பு பணியினர் அங்கே செல்ல முடியாத சூழல் உள்ளது. அப்படியே சென்றாலும் பெரிய அளவில் உடல் பாகங்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் விழுந்து வெடித்துச் சிதறியதாக கூறப்படும் துருக்கியின் ஆளில்லா விமானம் ஒன்றுதான் கண்டுபிடித்தது.
கடந்த 1960 டிசம்பர் 14ஆம் திகதி அங்குள்ள மஷாத்தின் நோகன் மாவட்டத்தில் ஒரு இஸ்லாமிய போதகர் குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த இப்ராஹிம் ரைசி. பாடசாலை படிப்பை முடித்த இவர், தொடர்ந்து சட்டப் படிப்பை முடித்தார். ஈரானின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவராக ரைசி வலம் வந்தார். தொடர்ந்து நீதிபதியாக பணியாற்றிய அவர் கடந்த 2019இல் ஈரான் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.
இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. கடந்த சில வாரங்களாக ஈரான் – இஸ்ரேல் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதிலும் இஸ்ரேல் மீது ஈரான் பல எதிர்பாரா தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் இந்த விபத்தும் நடந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.